அக்டோபர் 2:1836
ஹெச்.எம்.எஸ்.பீகிள் என்னும் கப்பலில் சென்று தென் அமெரிக்கக் கடல் பகுதிகளில் ஐந்து வருடம் ஆய்வு செய்த சார்லஸ் டார்வின் இன்று நாடு திரும்பினார்.
அக்டோபர் 2:1853
மின்காந்தத்தைக் கண்டுபிடித்த ஜுன்டொமினிக் அராகோ பாரீஸ் நகரில் காலமானார்.
அக்டோபர் 2 : 1869
மகாத்மா காந்தி பிறந்த நாள்.
காந்தி ஜெயந்தி.
அக்டோபர் 2:1904
லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்.
அக்டோபர் 2 : 1905
உடைந்து சிதறாத ஸேப்டி க்ளாஸ்க்கு (Safety glass) ஜான் க்ரூவுட் என்பவர் காப்புரிமம் பெற்றார்.
அக்டோபர் 2 : 1906
ஓவியர் ராஜாரவிவர்மா மறைந்த நாள்.
அக்டோபர் 2: 1908
தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் பிறந்த நாள்.
அக்டோபர் 2:1910
முதல் விமான விபத்து நடந்தது. மிலான் நகர் அருகே இரு விமானங்கள் மோதி விழுந்தன.
அக்டோபர் 2:1916
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டன் பிறந்த நாள்.
அக்டோபர் 2:1925
லண்டனில் மாடிபஸ் முதன் முதலில் விடப்பட்டது.
அக்டோபர் 2: 1930
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் பிறந்த நாள்.
அக்டோபர் 2 : 1951
சியாம் பிசாத் முகர்ஜியால் பாரதீய ஜன சங்கம் என்னும் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 2:1955
பெரம்பூர் I.C.F இரயில் பெட்டி தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கியது.
அக்டோபர் 2:1961
Shipping Corporation of India இன்று 100 கோடி ரூபாய் முதலீட்டுடன் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 2 : 1966
செகந்திராபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு தெற்கு மத்திய ரயில்வே துவங்கப்பட்டது.
அக்டோபர் 2 : 1975
காமராஜர் மறைந்த தினம்
அக்டோபர் 2 : 1988
ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் இந்தியாவிலேயே மிக நீளமான கடல்பாலம் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.
அக்டோபர் 2 : 1989
டில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவிலேயே மிக உயரமான தொலைக்காட்சிக் கோபுரம் இன்று செயல்படத் தொடங்கியது.
அக்டோபர் 2 : 2014
பிரபல தொழிலதிபரும், சக்தி குழுமத்தின் நிறுவனருமான 'பொள்ளாச்சி' நா. மகாலிங்கம் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback