அக்டோபர் 30 : 1883
குழந்தைத் திருமணத்தை எதிர்த்தவரும் விதவை மறுமணத்தை ஆதரித்தவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஜ்மீரில் மறைந்தார். விஷம் கலந்த பாலை தனக்குக் கொடுத்த சமையல்காரனை மன்னித்து, அவன் நேபாளத்துக்குத் தப்பிச் செல்லப் பணமும் கொடுத்தனுப்பியவர் இவர்.
அக்டோபர் 30 : 1909
இந்திய அணுசக்தியின் தந்தை என்று போற்றப்படும் ஹோமி பாபா (Homi Jehangir Bhabha) பிறந்த நாள்.
ஜனவரி 24, 1966 இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 30 : 1916
தமிழ் இலக்கிய உலகில் லா.ச.ரா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் பிறந்த நாள்.
லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பது தான் ல.ச.ரா என்பதன் முழு விரிவாக்கம். தமிழில் நனவோடை உத்தி என்ற இலக்கிய வகையை அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்.
200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
அக்டோபர்30, 2007 அன்று தனது தொண்ணூற்று இரண்டாவது பிறந்த நாள் அன்றே மறைந்தார்.
அக்டோபர் 30 : 2007
லா.ச.ரா மறைந்த நாள்.
அக்டோபர் 30 : 1925
ஜான் பெயர்ட் தான் கண்டுபிடித்த தொலைக்காட்சியை லண்டனில் இயக்கிக் காட்டினார். ஒரு சிறுவன் நடந்து செல்லும் காட்சி ஒளிபரப்பிக் காட்டப்பட்டது.
அக்டோபர் 30 : 1925
சைமன் கமிஷன் விசாரணைக்காக லாகூர் வந்தது. ‘சைமன் திரும்பிப் போ’ என்னும் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் லாலாலஜபதிராய் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் தடியடியில் இன்று படுகாயமடைந்த லஜபதிராய் மீண்டும் எழவேயில்லை. அதுவே அவர் மரணத்திற்குக் காரணமாயிற்று.
அக்டோபர் 30 : 1947
இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடானது.
அக்டோபர் 30 : 1956
இந்தியாவின் முதல் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலான அசோக் டில்லியில் திறந்து வைக்கப்பட்டது.
அக்டோபர் 30 : 1963
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி.
அக்டோபர் 30 : 1994முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண்சிங் டில்லியில் காலமானார். நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகிய மூவர் அமைச்சரவையிலும் பதவி வகித்த ஒரே அமைச்சர் இவர்.

Comments
Post a Comment
Your feedback