அக்டோபர் 14 : 1240
மொகலாயப் பேரரசின் ஒரே பெண் அரசியான ரஸியா சுல்தானா, அவளது கணவர் ஜலாலுத்தீன் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இல்டுமிஷின் மூன்றாவது மகன் முஸீத்தீன் பெக்ரம் டில்லி சுல்தானாக முடிசூட்டிக் கொண்டான்.
அக்டோபர் 14 : 1612
பாரீசிலிருந்து வெளிவந்த ‘ஜெர்னல் ஜெனரல் டி அஃபிச்சஸ்’ என்னும் பத்திரிக்கையில் முதன் முதல் விளம்பரம் வந்தது.
அக்டோபர் 14 : 1884
அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்டமான் தான் கண்டுபிடித்த போட்டோ கிராபிக் பிலிமிற்குக் காப்புரிமை பெற்றார்.
அக்டோபர் 14 : 1920
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதன் முறையாகப் பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அக்டோபர் 14 : 1942
எழுத்தாளர் சிவசங்கரி பிறந்த நாள்.
இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பலநிலைகளில் புகழ் பெற்றவர்.
சின்ன நுற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? என்ற இவரது படைப்பு புகழ் பெற்ற ஒன்று.
மேற்கு வங்கத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் எஞ்சின் ஓட ஆரம்பித்தது. இதன் பெயர் ‘லோக மான்யா’.
அக்டோபர் 14 : 1969
இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா’ வைத் தயாரித்த கான்பகதூர் அர்டேஹர் இராணி காலமானார்.

Comments
Post a Comment
Your feedback