அக்டோபர் 29 : 1863
செஞ்சிலுவைச் சங்கம் ஸ்விட்சர்லாந்தில் ஹென்றி டூனன்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
புலிட்ஸர் பரிசை நிறுவிய ஜோஸப் புலிட்ஸர் அமெரிக்காவில் காலமானார்.
அக்டோபர் 29 : 1920
கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் இவற்றில் பங்கு பெற அலிகாரில் ‘ஜாமியாமில்லியா இஸ்லாமியா’ ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 29: 1931
கவிஞர் வாலி பிறந்த நாள்.
வாலியின் இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன்.
"ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" என்ற இளையராஜாவின் பக்தி இழையோடும் குரலில் வருவது வாலியின் வரிகள் தான்.
"மல்லிகை என் மன்னன் மயங்கும்... " என்பது மனதை மயக்கும் ஒரு பாடல். பெரிதாக எதுகை, இயைபு, ஓசை நயம் இல்லாமலேயே பெரும் புகழ் பெற்ற இந்தப் பாடலும் வாலியின் பாடல் தான்.
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்.." என்ற பாடல் இல்லாமல் ஒரு தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்க முடியாது. அந்தப் பாடல் வாலி எழுதியது தான்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
18, ஜூலை 2013 வாலி மறைந்த நாள்.
அக்டோபர் 29 : 1963
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த நாள்.
முத்துராமலிங்கத் தேவர் 1963ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மறைந்தார். அவர் மரணத்திற்கு பின்னர், தனது உடலை சொந்த ஊரான பசும்பொன்னில் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி இருந்ததால் 30ம் தேதி பசும்பொன்னில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அக்டோபர் 29 : 1987
உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியதாக அறிவிக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback