அக்டோபர் 9: 1875
முதல் கால்பந்துப் போட்டி ஹாம்ப்டன் பார்க்கில் நடைபெற்றது.
அக்டோபர் 9: 1897
சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரருமான மு. பக்தவத்சலம் பிறந்த நாள்.
அக்டோபர் 9: 1911
வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற பி. எஸ். வீரப்பா பிறந்த நாள்.
வில்லத்தனம் என்றாலே ஒரு உரத்த, ஆணவச் சிரிப்பு என்பதை தன்னுடைய சிரிப்பின் மூலம் தனி அடையாளமாக்கியவர் இவர்.
1998, நவம்பர் 9 இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 9: 1943
‘ஸீமன் விளைவு’ புகழ் பீட்டர் ஸீமன் காலமானார்.
அக்டோபர் 9: 1949
இந்தியாவில் பிராந்திய படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 9: 1976
பம்பாய்க்கும் லண்டனுக்குமிடையே நேரடியாக டயல் செய்து பேசும் ஐ.எஸ்.டி வசதி ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 9: 2024
மனிதநேயமிக்க தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்த நாள்.
பெரும் சாம்ராஜ்யம்...
நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்...
ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை...
காரணம், லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்...
கோவிட் காலத்தில் அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும் என அவர் அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது...
அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது.
உள்ளே தீவிரவாதிகளிடம் சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் தீயணைப்பு வீரர்கள் அருகே அவர் தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.
தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.
அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்...
இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்...
எளிய மனிதர்களைப் பற்றியே எப்போதும் சிந்தித்தவர்...
கருணை உள்ள மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள். பெரும்பணக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
அவர் பெரும்பணக்காரர்களுள் கருணையும் அன்பும் தேசப்பற்றும் நிறைந்தவர்.
'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்ற திருக்குறளுக்கு அவர் வாழ்க்கையே பொருளாகிப் போனது.
.

Comments
Post a Comment
Your feedback