அக்டோபர் 15 : 1582
இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்சு முதலான நாடுகள் கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தன. அக்டோபர் 5ம் தேதி 15 ஆம் தேதியாகக் கணக்கிடப்பட்டது.
அக்டோபர் 15 : 1798
ஜாக்ஸன் கட்டபொம்மனை நடத்திய விதம் பற்றி விசாரித்த லெப்டினல் கர்னல் பிரௌன் ஓர்ம், ஜான்காஸ் மேயர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் கட்டபொம்மன் ஆஜரானார்.
கட்டபொம்மனை தேவையில்லாமல் ஜாக்ஸன் அவமானப்படுத்தினார் என இக்குழு கண்டித்தது.
இராமநாதபுரம் அரண்மனையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி கிளாக்கின் ஊதியத்திற்கு ஈடாக கட்டபொம்மன் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் இக்குழு அறிவித்தது.
அக்டோபர் 15 : 1840
இன்றைய மாநிலக் கல்லூரியின் முன்னோடியான ‘எடின்பார்க் ஹொம்' எழும்பூரில் இன்று வாடகைக் கட்டடத்தில் துவக்கப்பட்டது.
அக்டோபர் 15 : 1854
இந்தியாவில் முதன் முறையாக நாலணா போஸ்டேஜ் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
கல்கத்தாவில் அச்சடிக்கப்பட்ட இந்த ஸ்டாம்ப் தான் ஆசியாவின் முதல் இருவண்ண ஸ்டாம்ப்.
அக்டோபர் 15 : 1855
ஓரங்களில் துளையிடப்பட்ட ஸ்டாம்ப் முதன் முறையாக வெளியிடப்பட்டது.
அக்டோபர் 15 : 1924
திரைப்பட உலகின் பழம்பெரும் இயக்குநர் ஏ. பீம்சிங் பிறந்த தினம்.
நுட்பமான குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் பல படங்களை இயக்கியவர். இவர் படம் ஒவ்வொன்றும் உறவுகளின் மேன்மையைச் சொல்லும்.
'ப' வரிசை வெற்றிப் படங்கள் என்றாலே பீம்சிங் என்று சொல்லும் வகையில் 'ப' சென்டிமெண்ட் கொண்டவர்.
பாசமலர், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு, பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா என்று இவர் தந்த படங்கள் காலத்தை விஞ்சி நிற்பவை.
16 ஜனவரி 1978 இவர் மறைந்த தினம்.
அக்டோபர் 15 : 1931
இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் அப்துல் காலம் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
அக்டோபர் 15 : 1932
இந்தியாவின் முதல் விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘டாட்டா சன்ஸ் லிமிடெட்’ துவங்கப்பட்டது.
டாட்டாவே விமானத்தை கராச்சியிலிருந்து பம்பாய்க்கு ஓட்டி வந்தார்.
அக்டோபர் 15 : 1934
புல்லாங்குழல் இசையில் உலகப் புகழ் பெற்ற என். ரமணி பிறந்த தினம்.
அக்டோபர் 15 : 1949
மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்தது.
அக்டோபர் 15 : 1949
பிரணாய் ராய் பிறந்த தினம்.
தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் இவர் வழங்கிய வேர்ல்ட் திஸ் வீக்(World this week) ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி.
தேர்தல் நேரங்களில் இவர் வழங்கும் தேர்தல் கணிப்புகளும் தேர்தல் நேரலை செய்திகளும் உலகப் புகழ்பெற்றவை.
என்டிடிவி தொலைக்காட்சி இவர் தொடங்கியது தான்.
அக்டோபர் 15 : 1961
லண்டனில் மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டே இண்டர்நேஷனல்’ இன்று பீட்டர் பெனென்கன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 15 : 1988
உஜ்வாலா பட்டில் என்னும் பெண் ஜெகஸ் என்னும் படகில் உலகைச் சுற்றி வந்தார். படகில் உலகைச் சுற்றிய முதல் ஆசியப் பெண்மணி இவர்.



Comments
Post a Comment
Your feedback