அக்டோபர் 22 : 1879
இந்தியாவில் முதல் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கலகம் செய்ததற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாசுதேவ் பல்வந்த் பாட்கே 20.7.1879 அன்று கைது செய்யப்பட்டார். இன்று அவர் மீது இவ்வழக்கு பதியப்பட்டது.
அக்டோபர் 22 : 1925
தமிழ் நாவல்களுக்கு முன்னோடியாகக் கருதப்படும் பத்மாவதி சரித்திரம் எழுதிய அ.மாதவையா சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது உயிர் துறந்தார்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.
அக்டோபர் 22 : 1929
இந்தியாவில் முதன் முதலாக விமானத் தபால் தலை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 22 : 1947
காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது.
அக்டோபர் 22 : 2008
சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு நம் நாடு இன்று அனுப்பியது.

Comments
Post a Comment
Your feedback