அக்டோபர் 17 : 1605
மொகலாயப் பேரரசர் அக்பர் காலமானார்.
அக்டோபர் 17 : 1892
கோயம்புத்தூர் தந்த உலகப் பொருளாதார நிபுணர் ஆர். கே. சண்முகம் செட்டியார் பிறந்த நாள்.
1947 ஆம் ஆண்டு நம் பாரத நாடு விடுதலை அடைந்த பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் இவர்.
நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமை கொண்டவர்.
தமிழிசை இயக்கம் இவர் உருவாக்கியது தான்.
மே 5, 1953 இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 17 : 1922
பிரிட்டன் வானொலியில் முதன் முதலாக நாடகம் ஒலிபரப்பப்பட்டது.
அக்டோபர் 17 : 1933
ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி தீவிரமானதால் ஆல்பர்ட் ஜன்ஸ்டின் அங்கிருந்து வெளியேறி நியூஜெர்சியில் பிரின்ஸ்ட்டனில் குடியேறினார்.
அக்டோபர் 17 : 1940
காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். முதல் சத்தியாகிரகி வினோபா.
அக்டோபர் 17 : 1981
கவியரசு கண்ணதாசன் அமெரிக்காவில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback