அக்டோபர் 16 : 1700
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பிறந்த நாள்.
அலைபாயுதே... கண்ணா,
என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
என்ற அமரத்துவம் வாய்ந்த பாடல் வரிகளை எழுதியவர் இவர் தான்.
அக்டோபர் 16 : 1799
வீரபாண்டிய கட்டபொம்மன் ‘கயத்தாறு’ என்னுமிடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
அக்டோபர் 16 : 1846
பாஸ்டனில் மாஸா சூஸட் பொது மருத்துவமனையில் டாக்டர் காலின் வாரன் என்பவர் மயக்க மருந்து கொடுத்து ஒரு இளைஞனின் தாடையிலுள்ள கட்டியை அகற்றினார்.
மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்பட்ட முதல் அறுவைச் சிகிச்சை இது.
அக்டோபர் 16 : 1881
தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பிறந்த நாள்.
அக்டோபர் 16 : 1900
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி பிறந்த நாள்.
இவர் தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வைக்கும் வழக்கம் இருந்தது. அதன் வழியே வாசிக்கும் பழக்கம் குடும்பம் முழுமைக்கும் அமைந்திருந்தது.
கதை, கட்டுரை என்ற எந்தப் படைப்புக்குள்ளும் போகாமல் ஆராய்ச்சிக்கு மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் நேரத்தையும் பயன்படுத்திக்கொண்டவர் இவர்.
அக்டோபர் 16 : 1906
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையால் பங்கு ஒன்று பத்து ரூபாய் வீதம் பத்து லட்சம் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘சுதேசி கப்பல் கம்பெனி’ பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 16 : 1923
உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் பிறந்த நாள்.
ஏறக்குறைய எல்லா சங்க இலக்கிய நூல்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். இவர் உரை மேம்போக்காகவும் எளிமையான நடையிலும் அமைந்திருக்கும்.
17 ஏப்ரல் 1992 இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 16 : 1944
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் வெளியானது. சென்னை பிராட்வே திரையரங்கில் 16.10.1944 முதல் 12.11.1946 வரை 768 நாட்கள் ஓடிய இந்தப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது.
அக்டோபர் 16 : 1985
‘தர்மச் சக்கரம்’ மாத இதழின் ஆசிரியரும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் அமைத்தவருமான சுவாமி சித்பவானந்தர் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback