அக்டோபர் 19 : 1801
சோழபுரத்தில் ஆங்கிலேயப் படைக்கும் மருதுபாண்டியருக்கும் நடந்த போரில் மருது பாண்டியர் காயத்துடன் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 19 : 1888
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள்.
அக்டோபர் 19 : 1910
நோபல் பரிசு பெற்ற இந்தியர் சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள்.
விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கு 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி இவர் மறைந்தார்.
அக்டோபர் 19 : 1937
அணுவின் கட்டமைப்பு பற்றிய ஆய்வில் உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் கேம்பிரிட்ஜில் காலமானார்.
அக்டோபர் 19 : 1970
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒலியை விஞ்சும் முதல் போர் விமானம் மிக்2, இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அக்டோபர் 19 : 1974
புகழ் பெற்ற நாடகக் கலைஞர் நவாப்.டி.எஸ். ராஜமாணிக்கம் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback