அக்டோபர் 21 : 1799
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின் தளபதி பானர்மென் மற்ற பாளையக்காரர்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தான். பாளையக்காரர்கள் யாரும் ஈட்டி, வேல், வாள் போன்ற படைக்கலங்கள் வைத்திருக்கக்கூடாது. மீறினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது தான் அந்த ஆணை.
அக்டோபர் 21 : 1802
தனிப்பட்டவர்கள் தபால் மூலம் பார்சல் அனுப்பும் முறை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்டோபர் 21 : 1824
பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் என்பவர் போர்ட்லாண்ட் சிமெண்ட் தயாரிக்க காப்புரிமை பெற்றார். சென்னையில் முதன் முதலாக 1904 ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது.
அக்டோபர் 21 : 1833
நோபல் பரிசை உருவாக்கிய, சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் இன்று தான் பிறந்தார்.
அக்டோபர் 21 : 1835
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் மறைந்த தினம்
அக்டோபர் 21 : 1879
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த கார்பன் இழை மின்விளக்கு முதன் முதல் நீண்ட நேரம் எரிந்தது.
அக்டோபர் 21 : 1943
சிங்கப்பூரில் இத்தே சினிமா ஹாலில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு நேதாஜி சுபாஷ் சுதந்தர இந்திய அரசை அமைத்தார்.
அக்டோபர் 21 : 1993
கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல் அகல ரயில் பாதையில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback