அக்டோபர் 13 : 1792
அமெரிக்காவில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகை கட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டினார்.
அக்டோபர் 13 : 1884
கிரீன்விச் மீன் டைம் உலகம் முழுவதும் பொதுவான நேரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அக்டோபர் 13 : 1904
சிக்மண்ட் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்னும் நூல் வெளியானது.
அக்டோபர் 13 : 1908
திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த கொடுமையான தண்டனையை எதிர்த்து வ.உ.சிதம்பரம் பிள்ளையும். சுப்பிரமணிய சிவாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அக்டோபர் 13 : 1911
சகோதரி நிவேதிதா காலமானார்.
அக்டோபர் 13 : 1936
வீணை இசை வித்துவான் சிட்டிபாபு பிறந்த தினம்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட தன் வாழ்க்கையைத் தந்த சங்கரலிங்கனார் மறைந்த நாள்.
1.சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும்,
2.அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்,
3.மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
போன்ற கோரிக்கைகளுடன், 27.7.1956-இல் அவர் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.
அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அவருடைய இந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை. ஆனாலும் விடாமல் போராடி 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
இன்று அவர் உயிர் நீத்த நாள்.
Comments
Post a Comment
Your feedback