அக்டோபர் 8: 1878
கையுறை அணிந்துகொண்டு முதன் முதல் குத்துச் சண்டை பிரிட்டனில் நடந்தது.
அக்டோபர் 8: 1881
கடல் கொந்தளிப்பால் இந்தோசீனாவில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 8: 1908
லண்டனில் ஜீ. பிரிவர் என்பவர் முதன் முதலாக வில்பர் ரைட்டுடன் விமானத்தில் இருமுறை பயணம் செய்தார்.
அக்டோபர் 8: 1922
அறிவியல் அறிஞர் G.N.இராமச்சந்திரன் பிறந்த நாள்.
சர்.சி.வி.இராமனின் கண்காணிப்பின் கீழ் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.
அதாவது சர். சி.வி. இராமன் இவரின் Ph.D Guide.
உயிரியல் ஆய்வில் மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் (collagen) உயிரணு எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிந்தார். காலஜினில் உள்ள மூலக்கூறுகள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்பதை முதலில் கண்டுபிடித்தது இவர் தான்.
இயற்பியல் துறையில் எக்ஸ்கதிர் பற்றி ஆய்வினை ஆய்வு மேற்கொண்டார். பெப்டைடுகளின் புரதக்கூறுகளின் வடிவத்தைக் குறிக்கும் இவரது கண்டுபிடிப்பு இராமச்சந்திரன் வரைபடம் என்று அழைக்கப்படுகிறது.
நோபல் பரிசுக்கும் கூட இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
அக்டோபர் 8: 1932
இந்திய விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ‘ராயல் இந்திய விமானப்படை’ என்று குறிப்பிடப்பட்டது.
அக்டோபர் 8: 1958
பாகிஸ்தானில் ராணுவப்புரட்சியின் மூலம் அயூப்கான் ஆட்சியைக் கைப்பற்றினார். அங்கு நடந்த முதல் ராணுவப் புரட்சி அது தான்.
அக்டோபர் 8: 1959
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் காலமானார்.
அக்டோபர் 8: 1979
காந்தியவாதியும், காங்கிரசுக்கு எதிரான ஒரு புதிய அணியை உருவாக்கி வெற்றி கண்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாட்னாவில் காலமானார்.
அக்டோபர் 8: 1991
இந்தியாவில் முதன் முதல் இண்டர்நெட் சர்வீஸ் துவங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback