அக்டோபர் 5 : 1535
ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிள் இங்கிலாந்தில் வெளியானது.
அக்டோபர் 5 :
1823
இராமலிங்க வள்ளலார்
பிறந்த நாள்.
அக்டோபர் 5 : 1864
வங்காள விரிகுடாவில் உருவான கடும்புயல் கல்கத்தா நகரைத் தாக்கியது. கடல்நீர் 30 அடி உயரம் எழுந்ததால் 50,000 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூழ்கின.
அக்டோபர் 5 : 1914
விமானப் போரில் பிரெஞ்ச் விமானம் ஜெர்மனி விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. விமானச் சண்டையில் வீழ்த்தப்பட்ட முதல் விமானம் இது.
அக்டோபர் 5 : 1927
ரா. கி. ரங்கராஜன் பிறந்த நாள்.
குமுதம் இதழின் ஆசிரியர் குழுவுடனும் ஆசிரியராகவும் நாற்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.
பல வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். ஆகஸ்ட் 18, 2012 இவர் மறைந்த நாள்.
அக்டோபர் 5 : 1934
சோ என்ற பெயரில் புகழ் பெற்றவரான சோ.ராமசாமி பிறந்த நாள்.
துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் எனப் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர்.
அக்டோபர் 5 : 1951
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் இன்று தொடங்கியது.
அக்டோபர் 5 : 1982
ஜப்பானில் சோனி நிறுவனம் 5 செ.மீ திரை கொண்ட பாக்கெட் டெலிவிஷனை விற்பனைக்குக் கொண்டு வந்தது.
அக்டோபர் 5 : 1989
ஃபாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.
.jpeg)
Comments
Post a Comment
Your feedback