முன்பெல்லாம் வானொலி நிகழ்ச்சிகள் முடியும்போது "இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவடைகின்றன. நாளைய நிகழ்ச்சிகள் காலை 6 மணிக்குத் தொடங்கும். ஜெய்ஹிந்த்" என்று அறிவிப்புடன் முடியும்.
தோட்ட வேலைக்கு செல்பவர்கள் அன்றைய வேலையை முடிக்கும் போது "கைவிடும்நேரம் ஆச்சு" என சொல்வார்கள். அதாவது "இன்றைய நாள் வேலைகள் இத்துடன் முடிவடைகின்றன. மீதியை நாளை தொடரலாம்" என்பதுதான் அதன் பொருள்.
ஆங்கிலத்தில் இந்த கைவிடுகிற நேரத்தை,
Let's call it a day
என்பார்கள். இது,
Let's stop work now
என்பதன் மாற்று வடிவம்.
உடல் வேலைக்கு மட்டுமல்ல; இரவு படித்துமுடித்துவிட்டு தூங்கப்போகும் நேரத்துக்கும் கூட இது பொருந்தும்.
Comments
Post a Comment
Your feedback