நாம் ஒரு செய்தியைச் சொல்லும் போது அந்த செய்தியின் முடிவில் "இல்லையா?" என்று சேர்த்துக் கொள்வது மற்றவர்களை கவனிக்க வைப்பதற்கு ஒரு நல்ல வழி.
அப்போது கேட்பவர் அதற்கு "ஆமாம்" சொல்ல வேண்டியிருப்பதால் நாம் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார்.
சொல்லும்போது கவனிக்க வைப்பதற்காக நம் கையை உரிமையோடு பிடித்துக் கொண்டே சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது "புரிந்து கொண்டு ஆமாம் சொன்னால் தான் கையை விடுவேன்" என்பது போல இருக்கும்.
இந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.சபையின் எந்தக் கூட்டத்திலாவது பேசப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
இப்படிப்பட்டவர்களிடம் பெற்ற அனுபவமோ என்னவோ சிலர் யார் எதைச் சொன்னாலும் எதற்கு ஊர் வம்பு என்று "ஆமாம்" சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
மழை வருவது போல இருக்கிறது.
ஆமாம், அப்படித் தான் தெரியுது.
எவ்வளவு வெயில்!
ஆமாம், நல்ல வெயில்.
இதெல்லாம் சரி. யாருக்கும் தெரியாத செய்தியை முதல் முதலாகச் சொல்லும்போதும் "ஆமாம்" சொல்லி அதிர வைப்பவர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய தேர்வில் எனக்கு 100/100 மதிப்பெண் வரும்.
ஆமாம், 100 மார்க் வரும்.
அப்படியா மகிழ்ச்சி என்று தான் சொல்ல நினைத்திருப்பார்கள். ஆனாலும், ஆமாம் சொல்லிப் பழகிவிட்டது. என்ன செய்ய?
ஆங்கிலத்தில் "ஆமாம்" சொல்வது இன்னும் வசதியானது.
"ஆமாம் சாமிகள்" போல "affirmative சாமிகள்" இருப்பார்கள் போல.
It is very hot day.
So, it is.
It is a lovely scene.
Yes, it is.
They have won the match.
Yes, they have
My brother is going to London.
Yes, he is.
நாளை பள்ளி விடுமுறை என அறிவிக்கும் போது யாராவது ஆமாம் சொல்ல முடியுமா?
அதெப்படி பழக்கத்தை விடுவது. அப்போதும் சொல்வோம்.
Tomorrow will be a holiday.
So, it will.
Comments
Post a Comment
Your feedback