உணவுக்காக உயிருள்ள உடம்பைக் கொன்றவன்
பிறர் கொன்று தர உடம்பட்டவன்
கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று தந்த புலாலை வாங்கிக்கொண்டவன்
மகிழ்வுடன் கொழிக்கும் உயிரைக் கொன்று அதனைச் சமைத்துத் தந்தவன்
சமைத்ததை வாங்கி உண்டவன்
இவர்கள் அனைவரையும் பாவம் கட்டுப்படுத்தும்.
கொன்றான் கொலையை யுடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற்-கொன்றதனை
அட்ட னிடவுண்டா னைவரினு மாகுமவனக்
கட்டெறிந்த பாவங் கருது.
(சிறுபஞ்சமூலம்)
Comments
Post a Comment
Your feedback