வளர்கின்ற காலத்தில் காட்டு வழியில் நிற்கும் ஒற்றைக் கொம்பு காற்றில் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருக்கும்.
அப்படியெல்லாம் ஆடிக் கொண்டிருந்த அந்தக் கொம்பு வளர்ந்து மரம் ஆன பிறகு யானை தன் முதுகைச் சொரிந்து கொள்ள இங்கும் அங்கும் தேய்த்தாலும் அந்த மரம் அசையாமல் நிற்கும்.
இளம் வயதில் நாமும் அப்படித் தான். ஆடி ஓடி வேலை செய்ய வேண்டும். பின்பு, உரிய வயதில் நிம்மதியாக இருந்து கொள்ளலாம்.
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
(நாலடியார் 192)
Comments
Post a Comment
Your feedback