கோபம், நாம் எப்படிப் பட்டவர் என்பதை மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடுமாம்.
கோபம் எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால்,
ஒரு சூழ்நிலையில் கோபப்பட்ட பின்பு அதை மறக்காமல் மனதுக்குள் வைத்துக்கொண்டே இருந்தால் நாம் "கேவலமான பிறவி" என்ற catagory க்குள் வந்து விடுவோமாம்.
தன்மையானவர்கள் கோபம் எப்படி இருக்கும்?
அது சுடுநீர் போல இருக்குமாம்.
கொதிக்கிற நிலையில் கொண்டுவந்து வைத்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆறி தன் பழைய குளுமையான நிலைக்கு வந்து விடுவது நீரின் இயல்பு.
கோபப்பட்டால் தண்ணீர் மாதிரி கோபப்பட வேண்டும்.
அது அழகு.
எப்படிக் கோபப்பட வேண்டும் என்று தெரியாமல் வெட்டிக் கர்வமும், வெறும் கூச்சலும் என்று வாழ்ந்து கொண்டு, அதையும் "தன் கோபத்துக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள்' என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நமக்கு கோபம் ஒரு கலை என்பது புரியாமலேயே போய்விடுகிறது.
நெடுங்காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback