அழகான மாலை நேரம்.
மென்மையான சிறகுகளை உடைய வௌவால் பழமுள்ள மரங்களை நாடிச் செல்லும் காலம்.
பொருள் தேடப் போன அவன் மட்டும் இன்னும் என்னைத் தேடி
வராமல் இருக்கிறான்.
காத்திருக்கும் என் நெஞ்சம் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
பல ஊர்களுக்கும் சேர்ந்து ஒரே ஒரு பட்டறை இருந்து அதில் இருக்கும் துருத்தி எப்படி கொல்லன் காலில் ஓயாமல் மிதி படுமோ அப்படிக் கிடக்குது என் மனது.
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.
(குறுந்தொகை 172)
.
Comments
Post a Comment
Your feedback