பாடம் நடத்தி முடித்த பின்பு ஆசிரியர் கேட்பார்.
Able to understand?
புரிந்தவர்கள் மட்டுமல்லாமல் மொத்த வகுப்பும் yes sir என்று ஒரு சடங்காகப் பதில் சொல்லும்.
"புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது அனைத்தும் அறிவோம் யாம்" என்பது போல அந்தப் பதில் இருக்கும்.
புரிந்ததா என்று கேட்கும்போது புரியவில்லை என்பதைக் கூற நிறைய வாக்கியங்கள் உள்ளன.
I am all at sea.
I don't get it.
I can't make it out.
I can't make head or tail of it.
It's hard to understand.
சரி, அதை இப்படிச் சொல்லி அது ஆசிரியருக்கு புரிந்திருக்குமா என எப்படிப் புரிந்து கொள்வது?
வேறு எப்படி?
I don't get it சொல்வதைக் கொண்டு தான்.
Comments
Post a Comment
Your feedback