ஒரு மொழியின் சொற்களைக் கவனித்தால் அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்லுவார்கள்.
தமிழ் மொழியில் இயற்கையைக் குறித்த நுட்பமான கலைச்சொற்கள் வியப்புக்குரியவை. இயற்கையை எவ்வளவு ஆழமாகக் கவனித்து வந்திருக்கிறார்கள் என்பதை ஒரு பொருள் தொடர்புடைய பல சொற்களைக் கண்டு புரிந்து கொள்ளலாம்.
மேகம் என்ற ஒன்றைக் குறிக்க எழிலி, பெயல், மாரி, கார், கொண்டல், குயின், மங்குல் என்றெல்லாம் பல சொல்லாட்சிகள் உள்ளன. எங்கு கவனம் ஆழமாகப் பதிகிறதோ அங்கு சொற்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
ஆங்கிலத்திலும் இப்படியெல்லாம் நுட்பமான சொற்கள் உண்டு. அதில் பல சொற்கள் பண்பாட்டைக் கூறும். சில சொற்கள் நம்மை பயமுறுத்தும்; பதற வைக்கும். எதற்கு இப்படி எல்லாம் சொற்கள்? என யோசிக்க வைக்கும். கொலை செய்வது குறித்த ஆங்கிலச் சொற்கள் அந்த வகையைச் சார்ந்தவை.
'நாயைக் கொல்வதற்கு' என்று ஒரு தனிக் கலைச் சொல் வேண்டுமாம். அதனால் உருவான சொல்
Canicide அதாவது dog killing
'குருவிகளைக் கொல்வது' என்பதைக் குறிக்க தனியாக ஒரு சொல் வேண்டும் என எப்படி அவர்களுக்குத் தோன்றியதோ!
அதற்கும் ஒரு சொல்.
Avicide- bird killing
கொலை என்பது ஒரு சமூகத்துக்கு சாதாரணமாக இருக்கலாம்.
அதற்காக இப்படியெல்லாம் சொற்கள் வேண்டுமா?
அது மொழி வளம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது வாழ்க்கைமுறை எந்தக் கீழ்நிலைக்கு இறங்கிக்கிடக்கிறது என்பதைக் கூறுவதாக எடுத்துக் கொள்வதா?
இதை விடக் கொடுமை மனைவிகளைக் கொல்வதற்கு என தனியாக ஒரு சொல். தந்தையரைக் கொல்வதற்கு என ஒரு கலைச்சொல். இந்தப் பட்டியலில் சகோதரர்கள், சகோதரிகள், தாய் என வகைவகையான சொற்கள்.
Uxoricide- wife killing
Patricide - father killing
Fratricide- brother/sister killing
கொஞ்சம் தமிழ் பக்கம் திரும்பி வருவோம்.
இறந்தவரை இறந்துவிட்டார் என்று சொல்வது கூட பண்பாடல்ல என்று காலமானார் என்று சொல்ல வேண்டும் என்று கற்றுத்தருவது நம் மொழி.
அமங்கலமான சொற்களைக் கூட மங்கலமான சொற்களில் சொல்ல வேண்டும் என்பதற்காக இடக்கரடக்கல், மங்கலம் என்றெல்லாம் தமிழ் இலக்கணம் கூறும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதி சொன்னது எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது!.
Comments
Post a Comment
Your feedback