(21.5.22 TNPSV Gr2 தேர்வில் இந்தப் பகுதி கேட்கப்பட்டிருந்தது. 28.4.22 அன்று இடம் பெற்ற பாடல் இது)
சீதையும் லட்சுமணனும் உடன் தொடர ராமன் போகும் அழகை இப்படிக் கூறுகிறார் கம்பர்.
ராமனின் மேனியில் சூரிய ஒளி படுகிறது. ராமனின் மேனியின் பொலிவில் சூரிய ஒளிக் கதிர்கள் மறைகின்றன.
இடை ஒன்று இருப்பதே பொய்யோ எனத் தோன்றும் அளவு சிற்றிடை கொண்ட சீதையோடும் தன் இளையவன் லக்ஷ்மணனோ டும் போனான் ராமன்.
ராமனின் நிறம் மையோ? இல்லை
கொஞ்சம் பச்சை நிறம் போல இருக்கிறது. மரகதமோ?
இல்லை கடல் போல நீல வண்ணமோ?
மழை மேகம் போல அடர் நிறமோ?
ஐயோ எப்படிச் சொல்லுவது இவன் அழகை?
இவன் எப்போதும் அழியாத வடிவழகு உடையவன்.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
(கம்ப இராமாயணம்)
Comments
Post a Comment
Your feedback