இந்த உலகம் கதிரொளி சூழ்ந்த பூமி.
இந்தப் பூமியில் ஒரு நிலப் பகுதியை ஆள்பவர்கள் பேறு பெற்றவர்கள்.
இந்த உலகில் தான் தவம் செய்தவர்களும் வாழ்கிறார்கள்.
ஆட்சியாளர்களை தவ வாழ்க்கை வாழ்பவர்களோடு ஒப்பிட்டால் ஆட்சி அதிகாரம் எல்லாம் தவசிகள் முன்னால் வெண்கடுகை விடவும் சிறியது.
ஏனென்றால் அந்த ஆட்சி நிலையில்லாதது. இந்த நிலத்தில் ஒரு பகல் பொழுதில் ஒருவர் போய் வேறு ஒருவர் ஆட்சிக்கு வரலாம்.
ஆட்சி போன பின் அவர்களின் எல்லாமும் கைவிட்டுப் போய்விடும்.
ஆனால் தவ வாழ்க்கையில் இருப்பவர்களை திருமகள் என்றும் கைவிடமாட்டாள்.
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம்
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே.
(புறநானூறு)
Comments
Post a Comment
Your feedback