மீனாட்சி திருக்கல்யாணம்! சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மணக்கோலத்தில் இருக்கிறார்கள். திருக்கல்யாணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
சுந்தரேஸ்வரரை
மணப்பதற்கு இந்த மணப்பெண் மீனாட்சி என்ன தவம் செய்தாளோ!
என்று சிலர் சொல்ல,
மீனாட்சியை
மணப்பதற்கு இந்த சுந்தரேஸ்வரர் அல்லவா தவம் செய்திருக்க வேண்டும்!
என்று சிலர் சொல்ல,
இந்தக் கல்யாணம்
இங்கு நடக்க இந்த மதுரை தான் தவம் செய்திருக்க வேண்டும்!
என்று சிலர் சொல்ல,
இவர்களின் திருக்கல்யாணத்தைப் பார்ப்பதற்கு நாம் தான் தவம் செய்திருப்போம் போல என இன்னும் சிலர்
சொன்னார்கள்.
நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு’ என்பர்,
’மங்கையை மணப்பான்
என்னோ வள்ளலும் நோற்றான்’ என்பர்,
’அம் கடி மதுரை
என்னோ ஆற்றிய தவம்தான்’ என்பார்
’இங்கு இவர் வதுவை
காண்பான் என்ன நாம் நோற்றோம்’ என்பார்.
(திருவிளையாடல்
புராணத்தில் பரஞ்சோதி முனிவர்)
Comments
Post a Comment
Your feedback