நெல்லை அரிசியை நேரினில் கண்டதும்
துள்ளிக் குதிக்கும் பெண்டாட்டி- ரெண்டு
சுள்ளி கொண்டு கனல் மூட்டி- தன்
பல்லை நெருக்கும் பசிப்பிணி தீர்த்திட
பானை எனை அதில் ஏற்றி - கொஞ்சம்
பைப்புத் தண்ணீரையும் ஊற்றி...
(கண்ணதாசன்)
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
(அகநானூறு)
Comments
Post a Comment
Your feedback