சங்கு போன்ற வெண்மையான தாமரைப் பூவுக்கு நீரும் சூரியனும் தாய் தந்தை போல இருந்து அதைப் பூத்து மணம் பரப்ப வைக்கும்.
ஆனால் அந்தப் பூ செடியிலிருந்து பறிக்கப்பட்டால் அதன் பின் அந்த நிலை மாறிவிடும்.
அந்தப் பூ நீரில் விழுந்தால் அழுகிப் போய்விடும்.
தரையில் விழுந்தால் சூரியனின் வெம்மை காரணமாக கருகிப் போய்விடும்.
பெற்றோரை உதாசீனப்படுத்திய பிறகு அந்தப் பெற்றோரே நினைத்தாலும் ஒருவனின் வாழ்கையை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவர முடியாது.
மற்றோர் தான் முக்கியம் என சேரிடம் தெரியாமல் சேர நினைத்தால் செடியில் இருந்து கொய்யப்பட்ட பூவாகி விடுவோம்.
அதன் பிறகு நீரும் வெயிலும் நினைத்தாலும் பூ அழுகிப் போவதையோ கருகிப் போவதையோ தடுக்க முடியாது.
சங்குவெண் டாம ரைக்குத் தந்தையா யிரவி தண்ணீர்
அங்கதைக் கொய்து விட்டா லழுகச்செய் தண்ணீர் சொல்லும்
துங்கவெண் கரையிற் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களின் நிலைமை கெட்டா லிப்படித் தயங்கு வாரே.
(விவேக சிந்தாமணி)
Comments
Post a Comment
Your feedback