ஒரு பெரிய கட்டடம் இடிந்த போதும் அதில் இருந்த மரங்கள் இன்னொரு கூடம் கட்டுவதற்குப் பயன்படும்.
பெரிய மனிதர்கள் அந்த மரம் போன்றவர்கள். தான் எந்த நிலையில் இருந்தாலும் தன்னால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று தான் சிந்திப்பார்கள்.
பெருமையோடு இருந்த காலத்தில் மட்டுமல்ல. பெருமை எல்லாம் போன காலத்திலும் பெரியவர்களின் அப்போதைய பெருமைக்குக் கூட யாரும் ஈடாக முடியாது.
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
ஈடில் லதற்கில்லை பாடு.
(பழமொழி)
Comments
Post a Comment
Your feedback