காக்கை கரையும் என்று மரபாகக் கூறி விடுகிறோம்.
குயில் கூவும்.
மயில் அகவும்.
எல்லாம் அந்த வகை தான்.
ஆனால், புறா?
புறா கத்தும் என்பது சரியா?
புறா புர் புர் என ஒரு மாதிரி ஒலி எழுப்பும்.
புறா குனுகும் என்பது மரபு.
ஆனால், புறா கூவும் என்று இன்னிலை அடி ஒன்று சொல்லும்.
'கோலப் புறவின் குரல் கூவி...'
என்பது அந்த அடி.
குறுந்தொகையில் கூட 'புறா கூவும்' என ஒரு பாடல் கூறுகிறது.
இரை தேடிப் பிரிந்து போன தன் ஆண் புறா இன்னும் திரும்பி வராத போது அதை நினைத்து பெண் புறா கூவிக் கொண்டிருந்ததாக குறுந்தொகை 154 ஆம் பாடல் கூறுகிறது.
எனவே கூவும் என்பது குயிலுக்கு மட்டும் சொந்தமல்ல. புறாவுக்கும் அதில் கொஞ்சம் உரிமை இருக்கும் போல.
Comments
Post a Comment
Your feedback