என் கண்ணின் கருமணிப் பாவையே !
இத்தனை நாள் என் கண்களில் அழகாய் வீற்றிருந்தாய்.
இனி என்னவள் அங்கு வந்து அமர இடம் வேண்டும். எனவே நீ போய் விடு.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
(திருக்குறள்)
விளக்கம்:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.
(மு.வரதராசன்)
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.
- பாரதி
Comments
Post a Comment
Your feedback