நல்லவர்களும் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் நன்மை மட்டும் செய்வோரும் கூட
வறுமையில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அதே நேரத்தில்
பிறருக்கு எந்த நன்மையும் செய்யாத மூடர்கள்
வசதியாக வாழ்வதையும் பார்க்கிறோம்.
இந்த நிலைக்கு என்ன காரணம்?
முன்பு செய்த வினையின் விளைவுதான் என்று நினைப்பதைத் தவிர
வேறொன்றும் நினைக்கத் தோன்றவில்லை.
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
(நாலடியார் 265)
வள்ளுவருக்கும் இந்தக் கேள்வி வந்திருக்குமோ?
அதனால் தானோ என்னவோ,
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
என்று சொல்வார்.
அந்தக் கேள்விக்கு அவரே ஒரு பதிலும் சொல்வார்.
அது,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
இதெல்லாம் இப்படித் தான் என்று விதிக்கப்பட்டிருந்தால் அதெல்லாம் அப்படித் தான் நடக்கும் போல.
என்று அவர் பதில் அமைதிப்படுத்தும்.
Comments
Post a Comment
Your feedback