பெரிய மழை பெய்த பிறகு ஆர்ந்தெழுந்து பாயும் பெருவெள்ளம்.
அதில் குதித்தால் ஆளை இழுத்துக் கொண்டு போய்விடும் என்பது தெரியும்.
இருந்தாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் அந்த வெள்ளத்துக்குள் குதித்து விளையாடுபவர்கள் இருக்கிறார்கள்.
அவன் கூட சண்டை போட்டால் என்னால் கொஞ்ச நேரம் கூட அவனோடு பேசாமல் இருக்க முடியாது என்று என்க்குத்தெரியும்.
ஆனாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் எப்போதும் அவனோடு சண்டை போட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
(திருக்குறள்)
Comments
Post a Comment
Your feedback