வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று வீரத்துடன் போரிடப் போயிருக்கிறான் அவன்.
"வருவேன் விரைவில்" என்று சொல்லித்தான் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போயிருக்கிறான்.
அவனோ போர்க்களத்தில்... வெற்றிக்காக உயிரைப் பணயம் வைத்து...
நானோ அவன் நினைவில்...அவன் வருகைக்காக என் உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு...
என்று வருமோ அந்த நன்னாள்...
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(திருக்குறள்)
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா...
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்...
இந்தத் திருக்குறளை நினைவுபடுத்தும் இந்த வரிகள்.
Comments
Post a Comment
Your feedback