Skip to main content

UPSC Tamil syllabus

 

Union Public Service Commission

இந்தியக் குடிமைப் பணித்தேர்வு

CIVIL SERVICES MAIN EXAMINATION

தமிழ் விருப்பப்பாடம்

பாடத்திட்டம்

தமிழ் இலக்கியம் - 

தாள் - I

பகுதி -1: தமிழ்மொழி வரலாறு

முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்

பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட மொழிகளிலும்  தமிழ்மொழி பெறுமிடம்

திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்

ங்க இலக்கிய மொழி

இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்

வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள்வினைகள்

பெயரடைகள்,  

வினையுரிச்சொற்கள், 

காலங்காட்டும் உருபுகள்

வேற்றுமை உருபுகள்.

பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்

வட்டாரசமுதாயக் கிளை மொழிகள்

எழுத்து மொழிபேச்சு மொழிக்கிடையே உள்ள வேறுபாடுகள்.

 

 

பகுதி - 2: தமிழ் இலக்கிய வரலாறு

தொல்காப்பியம்

ங்க இலக்கியம்

அகப்புறப் பாகுபாடு

ங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புகள்

நீதி இலக்கிய வளர்ச்சி

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

 

பகுதி - 3: பக்தி இலக்கியங்கள்

(ஆழ்வார்களும் நாயன்மார்களும்)

ழ்வார் பாடல்களில் நாயகி பாவனை

சிற்றிலக்கிய வடிவங்கள் (தூதுஉலாபரணிகுறவஞ்சி)

புதிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள்புதினம், சிறுகதை,  புதுக்கவிதை.

இக்காலப் படைப்புகளில் ல்வேறு அரசியல் கொள்கைகளின் தாக்கம்.

 

பகுதி -1:

தமிழ் ஆய்வின் இன்றைய போக்கு

 திறனாய்வு அணுகுமுறைகள்: சமூகம்உளவியல்வரலாறு, ஒழுக்கமுறை ∙ திறனாய்வின் பயன்கள்

 பல்வேறு இலக்கிய உத்திகள்: உள்ளுறைஇறைச்சிதொன்மம், உருவகம் (தொடர்  உருவம்) அங்கதம்மெய்ப்பாடுபடிமம்குறியீடுஇருண்மை

ஒப்பிலக்கியக் கருத்துரு

ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்.

பகுதி - 2

∙ தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள்கதைப்பாட்டுபாடல்கள்பழமொழிகள்,  விடுகதைகள்.

∙ நாட்டுப் புறப்பாடல்களில் சமுதாய ஆய்வு.

∙ மொழிபெயர்ப்பின் பயன்கள்.

∙ தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற மொழிபெயர்ப்புகள்

 ∙ தமிழில் இதழியல் வளர்ச்சி.

 

பகுதி - 3: தமிழரின் பண்பாட்டு மரபு

∙ காதல் போர் பற்றிய கருத்துகள்

∙ அறக்கருத்துகள்

∙ பழந்தமிழர் போரில் பின்பற்றிய ஒழுக்க நெறிமுறைகள்

∙ ஐந்தினைகளில் மரபுகள்நம்பிக்கைகள்சடங்குகள்வழிபாட்டு முறைகள்

∙ சங்க இலக்கியத்திற்குப்பிறகு தெரியலாகும் பண்பாட்டு மாற்றங்கள்

இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பு (சமணமும் பெளத்தமும்)

∙ காலந்தோறும் கலைகட்டிடக்கலையில் ஏற்பட்ட வளர்சசி

 (பல்லவர்,  பிற்காலச்சோழர், நாயக்கர்)

∙ தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட பல்வேறு அரசியல்சமூகம்சமயம்,  ண்பாட்டு

 இயக்கங்களின் தாக்கம்.

∙ இக்காலத்தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு மாற்றத்தில் தகவல் தொடர்பு 

 சாதனங்களின் பங்கு.

 

தாள் - II 

பகுதி - 1

பண்டைய இலக்கியம்

 (Ancient Literature)

1. குறுந்தொகை (1 - 25 பாடல்கள்)

2. புறநானூறு (182 - 200 பாடல்கள்)

3. திருக்குறள் பொருட்பால்- அரசியலும் அமைச்சியலும் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை)

பகுதி - 2

புராண (இதிகாச) இலக்கியம் (Epic Literature)

1. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் மட்டும்

2. கம்பராமாயணம்: கும்பகருணன் வதைப்படலம்

பகுதி - 3

பக்தி இலக்கியம்  (Devotional Literature)

1. திருவாசகம்: நீத்தல் விண்ணப்பம்

2.திருப்பாவை: முழுவதும் (முழு பாடல்களும்)

புதிய (நவீன) இலக்கியம் (Modern Literature)

பகுதி - 1: கவிதை

1. பாரதியார்: கண்ணன் பாட்டு

2. பாரதிதாசன்: குடும்ப விளக்கு

3. நா.காமராசன்: கறுப்பு மலர்கள்.

கட்டுரை

1. மு. வரதராசனார்: அறமும் அரசியலும்

2. சி.என். அண்ணாதுரை: ஏ! தாழ்ந்த தமிழகமே!

 

பகுதி - 2

புதினம்சிறுகதை மற்றும் நாடகம்

1. அகிலன்: சித்திரப்பாவை

2. ஜெயகாந்தன்: குருபீடம்

3. சோ: யாருக்கும் வெட்கமில்லை

பகுதி -3

நாட்டுப்புற இலக்கியம்

1. முத்துப்பட்டன் கதை பதிவு செய்தவர் நா. வாணமாமலை (வெளியிட்டோர் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)

2. மலையருவி தொகுத்தவர் கி.வா.ஜெகநாதன் (வெளியிட்டோர் - சரசுவதி  மகால், தஞ்சாவூர்)

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...