அவர் காலையில் வேலைக்குப் புறப்பட்டுப் போனவுடன் அவரது குற்றம்குறைகள் எல்லாம் வரிசையாக நினைவுக்கு வருகின்றன.
ஆனால் அவர் வீட்டுக்கு வந்தவுடன் எல்லாமே மறந்து போய்விடுகின்றன.
இந்த நோய்க்கு எந்த மருத்துவம் பார்க்க நான்?
பேணும் கொழுநர் பிழைகள் எலாம்
பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனபொற் கபாடம் திறமினோ”
(கலிங்கத்துப் பரணி 65)
திருக்குறள் இடம் கூட அதைத்தான் சொல்கிறது.
இந்தப் பெண்ணுக்கும் அதே உணர்வு தான்.
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாத போதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
(திருக்குறள்)
அதனால் தான் நிறைய ஆண்களின் தலை தப்பித்துக்கொண்டிருக்கிறதோ?
Comments
Post a Comment
Your feedback