கண்ணதாசன் காமராஜரை விட்டுப் பிரிந்து வந்த பிறகு மீண்டும் காமராஜரிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் இந்தப் பாட்டை எழுதினார் என்று சொல்வார்கள்.
இந்தப் பாட்டை எழுதும் போது கண்ணதாசன் மனதில் காமராஜர் மட்டுமல்ல கலித்தொகை என்ற இலக்கியமும் இடம்பிடித்திருக்குமோ என எண்ணத் தோன்றும்.
பட்டணத்தில் பூதம் படத்தில் 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி` எனத் தொடங்கும் அந்தப் பாடலில் கண்ணதாசன் பின்வருமாறு பாடியிருப்பார். (காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமி).
“மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்”
இந்த வரிகளை மனதில் வைத்துக்கொண்டு பின்வரும் கலித்தொகை வரிகளைப் படிக்கும் போது கவிஞரின் மனதில் கலித்தொகையும் இருந்தது தெரியும்.
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;….”
(கலித்தொகை -9)
பாடலின் பொருள் இது தான்.
மலையில் தான் சந்தனம் பிறக்கிறது.
கடலில் தான் முத்து பிறக்கிறது.
யாழில் தான் இசை பிறக்கிறது.
ஆனால் உரிய காலம் வரும் வரை தான் அவை அங்கே இருக்கும்.
அதன் பிறகு அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் தானே சொந்தமாகின்றன?
உன் மகளும் அப்படித்தானே.
உன் மகள் குறிப்பிட்ட பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள் அவளுக்கு ஏற்ற மன்னவனுக்குத் தான் உரியவள் என்பதைப் பக்குவமாக அவளது பெற்றோர்க்குச் சொல்கிறது பாடல்.
Comments
Post a Comment
Your feedback