நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றபடியே தன் மனைவியிடம் சொல்லத் தொடங்கினார் அவர்.
“என் அன்புக்குரியவளே!
இந்தப் பொருளையெல்லாம் உன்னிடம்
அன்பு காட்டுகின்றவர்களுக்குக் கொடு.
உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்கு
மட்டுமல்ல.
நீ அன்பு காட்டுபவர்களுக்கும்
கொடு.
நம் உறவினர்களில் மூத்தோர்க்குக்
கொடு.
உன்னுடைய உறவினர்களுக்கும்
கொடு.
நாம் பசியால் வருந்தியபோது
நமக்கு உதவிய நல்லோர்களுக்கும் கொடு.
இவர்கள் நமக்கு உறவினர்-
உறவினர் அல்லாதவர் என்று நினைக்காது கொடு.
இவர்களுக்குக் கொடுக்கலாமா
வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல் நீ விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் கொடு.
நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணாமல் எல்லோருக்கும் கொடு.
நம்முடைய வறுமை நிலையைப்
போக்க ஏதாவது பொருள்பெற்று வரலாம் என குமண வள்ளலைப் பார்க்கப் போனேன்.
அந்த வள்ளல் அள்ளிக்கொடுத்தது
தான் இத்தனை செல்வமும்.
இப்படித் தன் மனைவியிடம் சொல்லி மகிழும் அவர் புலவர் பெருஞ்சித்திரனார்.
அப்படிப்பட்டவர்கள்
வாழ்ந்த தமிழகத்தில் தான் நா(மு)ம் வாழ்கிறோம்.
நின் நயந்து
உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்
பல்மாண்
கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்
கடும்பின்
பசிதீர யாழ நின்
நெடுங்
குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கும்
என்னாது, என்னோடும் சூழாது
வல்லாங்கு
வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும்
கொடுமதி மனைக்கிழவோயே
பழம்தூங்கு
முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
(புறநானூறு)
நின் நயந்து- உன்னிடம்
அன்பு காட்டி,
உறைநர்க்கும்-
வாழ்பவர்களுக்கும்,
நீ நயந்து – நீ அன்பு
காட்டி,
உறைநர்க்கும்
–வாழ்பவர்களுக்கும்,
பல்மாண்- பல
மாட்சிமைப்பட்ட,
கற்பின் –சொன்ன
சொல்லிலிருந்து மாறுபடாத,
நின் கிளைமுதலோர்க்கும்-
உன்னுடைய சுற்றத்தினர் முதலானோர்க்கும்,
கடும்பின் பசிதீர –
சுற்றத்தின், பசியைத் தீர்ப்பதற்கு,
நின்நெடும் – உன்னுடைய
நெடிய,
குறியெதிர்ப்பு-
எதிர்பார்ப்பு
நல்கியோர்க்கும் –
வழங்கியோருக்கும்,
இன்னோர்க்கும் என்னாது-
இவர் இப்படிப்பட்டவர் என்றும் நினையாமல்
என்னோடும் சூழாது-
என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்,
வல்லாங்கு வாழ்தும் –
வன்மையாக வாழலாம்,
என்னாது நீயும்- என்றும்
எண்ணாமல்,
எல்லோர்க்கும்-
எல்லோருக்கும்,
கொடு-கொடு
மதி –கருது,
மனைக்கிழவோயே –மனைக்கு
உரியவளே,
பழம்தூங்கு –பழங்கள்
தொங்கும்
முதிரத்துக் கிழவன்
–முதிரமலைக்குத் தலைவன்,
திருந்துவேல் – செம்மையான
வேலையுடைய,
குமணன் நல்கிய வளனே-
குமணவள்ளல் வழங்கிய செல்வம்
Comments
Post a Comment
Your feedback