அரண்மனைக்குள் செல்லாமல் கதவோரம் நின்று கொண்டிருக்கிறது அந்த யானை.
உள்ளே செல்ல அதற்கு வெட்கம்.
போரில் சண்டை போடும் போது பகை மன்னனின் கோட்டை மதில் சுவரை மோதித் தகர்த்து அதன் தந்தங்கள் முறிந்திருக்கின்றன.
பலரைக் காலால் இடறி, அதன் கால் நகங்கள் தேய்ந்து போயிருக்கின்றன.
இந்தக் கோலத்தில் அரண்மனைக்குள் போனால் தன் பெண்யானை தன்னைப் பார்த்துச் சிரிக்குமே என்று வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளே செல்லாமல் கதவோரம் நின்று கொண்டிருக்கிறது.
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு.
(முத்தொள்ளாயிரம்)
போரில் வீரம்
வென்ற பிறகு வெட்கம்
இது சோழ மன்னனின் அரண்மனை யானை.
Comments
Post a Comment
Your feedback