வைகை ஆற்றில் பொங்கிப் பெருகும் புதுவெள்ளம்.
அவன் இளைஞன். தண்ணீரில் பாய்கிறான்.
வாழை மரத் துண்டைத் தழுவியபடி ஆனந்தமாக நீந்தி விளையாடுகிறான்.
கரையோரம்
சில பெண்கள் நின்றிருந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியை அவன் பார்த்தான்.
அவள் மேல் (கண்டதும்)காதல் கொண்டான்.
இந்தப் பெண்ணின் அழகு அவனுடைய மனத்தைப் பிடித்து இழுத்தது.
அவளுக்கும் அவன்மீது ஆசைதான்.
நின்று வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
இந்த ஆற்றுக்குக் காதலர் மனம் புரியவில்லையே!
அவனை அவள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் வேறு
எங்கோ கூட்டிப் போகிறதே.
இதென்ன நியாயம்?
அவள் தன்னையும் மறந்தாள்;
தன்னுடைய தோழியரையும் மறந்தாள்.
அவனைப் பின்தொடர்ந்து கரையோரமாகவே நடந்தாள்.
இப்படி நடந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கின்ற தோழிகள் என்னவெல்லாம் சொல்லி அந்தப் பெண்ணைக் கேலி செய்திருப்பார்கள்? எத்தனை பேரிடம் சொல்லிச் சிரித்திருப்பார்கள்?
தண்டு தழுவாத் தாஅவு நீர் வையையுள்
கண்ட
பொழுதில்
கடும்
புனல்
கை
வாங்க
நெஞ்சம்
அவள்
வாங்க
நீடு
புணை
வாங்க
நேர்
இழை
நின்று
உழிக்கண்
நிற்ப
நீர்
அவன்
தாழ்வுழி
உய்யாது
தான்
வேண்டும்
ஆறு
உய்ப்ப
ஆயத்துடன்
நில்லாள்
ஆங்கு
அவன்
பின்
தொடரூஉ…
(பரிபாடல்)
Comments
Post a Comment
Your feedback