ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில், 1950 ஜன., 26ம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார்.
இவ்விழாவின் போது, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார்.
பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்;
தேசியக்கொடியையும் பறக்கவிட்டார்.
பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார்.
பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில் இர்வின் மைதானத்துக்கு சென்றார்.
வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
மக்கள் 'ஜெய்ஹிந்த்' எனக் கோஷமிட்டனர்.
பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெளிநாட்டு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிகள் மாலை 3:45 மணிக்கு முடிந்தன.
முதல் நான்கு குடியரசு தின ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெவ்வேறு இடங்களில் நடந்தன.
1950ல் இர்வின் மைதானம்,
1951ல் கிங்ஸ்வாய்,
1952ல் செங்கோட்டை,
1953ல் ராம்லீலா மைதானம் என நடந்துவந்தது.
இதன் பின் 1955ம் ஆண்டில் இருந்து, தற்போது கொண்டாடப்படும் ராஜ்பாத்தில் அணிவகுப்பு நடக்கிறது.
அதிக முறை, குடியரசு தினவிழாவில் ,பங்கேற்ற ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்.
இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
நாட்டின், 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாக்களுக்கு மட்டுமே தலைமை வகித்தார். காரணம் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.
Comments
Post a Comment
Your feedback