தையல் என்றால் என்ன?
தையல் என்ற சொல் தையல் வேலையையும் பெண்ணையும்
குறிக்கும் என்று நமக்குத் தெரியும்.
தையல் என்ற சொல் கட்டழகு , தைப்பு, பெண், தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது என்று பல பொருள் தரும் சொல் .
தையல்
சொல் கேளேல் என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி.
தையலை
உயர்வு செய் என்றார் பாரதியார்.
கண்ணதாசனின் சிலேடை இது.
கையிலா ரவிக்கை போட்டுக்
கால்தூக்கும் நடையன் போட்டு
மையிலே கண்ணைப்போட்டு
மார்பிலே சுருக்குப் போட்டு
பொய்யான கொண்டை போட்டுப்
போகின்ற பெண்ணைப் பார்த்து
'தையலே' என்றான் எங்கும்
தையல்போட் டிருந்த தாலே!.
கண்ணிலே மை போட்டு அல்ல.
மையிலே கண்ணைப்போட்டு ....
கையிலா - sleeveless
கால்தூக்கும் நடையன்- high heels
பொய்யான கொண்டை-wig
Comments
Post a Comment
Your feedback