வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன.
குளிர்ந்த காற்று அடிக்கிறது.
மண் வாசம் எங்கிருந்தோ வருகிறது.
மழை வரும் என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
அது போல,
கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாரும்
இல்லை.
இருந்தும்,
"எவ்வளவோ குறிகள் இருக்கின்றன, அடையாளங்கள் இருக்கின்றன, கோவில்கள் இருக்கின்றன,
வேதாகம நெறிகள் இருக்கின்றன, அவற்றில் சொல்லப் பட்ட நேர்மையான கருத்துக்கள் இருக்கின்றன, இவ்வளவு ஆயிரம் இருந்தும், சொன்னாலும், அறிவில்லாமல் , இவை அனைத்தும் உங்கள் மனதில் ஏறாமல் இருப்பது எவ்வாறு?
இத்தனையும் பொய்யாகவா இருக்கும் ?"
என்று திருநாவுக்கரசர் கேட்கிறார்.
பாடல்:
குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.
Comments
Post a Comment
Your feedback