நம்மில் பலரும் லைஃப்பாய் சோப்பு போட்டு குளித்திருப்போம். இந்த லைஃப்பாய் சோப் நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது.
1895-ம் ஆண்டு சனவரி 22 லைஃப்பாய் சோப்
ட்ரேடு மார்க் பதிவு செய்யப்பட்டு சுமார் 125 வருடங்கள் ஆகிவிட்டன.
1894-ம் ஆண்டு வில்லியம், ஜேம்ஸ் லீவர்ஸ் சகோதர்களால்
காலரா நோயைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோப்தான்
லைஃப்பாய்.
லைஃப்பாய் சோப் இந்தியாவுக்கு அறிமுகமாகியும் சுமார் 125 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கிருமிகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும் சோப்பு என்பது மட்டும் மாறவில்லை.
காலரா வரை நோய் பெரும்பாலும் தொடுதலின்
மூலம்தான் பரவுகிறது. இந்தப் பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டும்
என்கிற நோக்கில் தயாரிக்கப்பட்ட சோப்தான் இந்த லைஃப்பாய்.
`லைஃப்பாய் இருக்குமிடமே ஆரோக்கியம்
இருக்குமிடம்’ என்கிற விளம்பர வாசகம் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
1980, 90-களில் லைஃப்பாய் சோப்பின் வளர்ச்சிக்குத் தடையாக வேறெந்த கார்பாலிக் சோப்பின் அறிமுகம் இல்லை என்றாலும், அழகும் கவர்ச்சியும் பெரிய அளவில் இல்லாமல் இருந்ததால், லைஃப்பாய் சோப் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சோப்பாகக் கருதப்பட்டது.
2002-ம் ஆண்டிலிருந்து லைஃப்பாய் பல வகையான
சோப்புகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அவற்றில் சில:
லைஃப்பாய் ப்ளஸ்,
லைஃப்பாய் ஆக்டிவ் ரெட்,
லைஃப்பாய் ஆக்டிவ் ஆரஞ்ச்,
லைஃப்பாய் இன்டர்நேஷனல்,
லைஃப்பாய் டோட்டல்,
லைஃப்பாய் ஃப்ரஷ்,
லைஃப்பாய் ஸ்ட்ராங்,
லைஃப்பாய் நேச்சுரல்ஸ் போன்றவையாகும்.
காலத்திற்கேற்றாற் போல புதுப்புது சோப்புகளை
புது வடிவங்களில் லைஃப்பாய் அதனுடைய பெயரின் கீழ் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்திய மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய
பிராண்டுகளில் ஒன்று. லைஃப்பாய் .
காலராவைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட இந்த சோப் கொரோனா காலத்திலும் தொடர்ந்து இருப்பது அதன் பெருமைக்கு முக்கியமான சான்றாகும்.
Comments
Post a Comment
Your feedback