தமிழில் வெளிவந்த முதல் சில சமையல் நூல்களுள் ஒன்று 'அனுபோகமாகிய சைவ பதார்த்த முறை'.
இந்தச் சமையல் புத்தகத்தில் என்ன சிறப்பு என்றால் இதிலுள்ள ஒவ்வொரு சமையல் குறிப்பும் பாட்டு வடிவத்திலேயே இருக்கும்.
கத்தரிக்காய் பொரியல் செய்வதற்கான சமையல் குறிப்புப் பாடல் இது.
இருபது தான் கத்தரிக்காய் கொண்டுவந்து
இன்பமுடன் ஒவ்வொன்றாய் நாலாய்க் கொய்து
அரைப்படி தான் ஜலம் தனிலே வேகவைத்து
அரிமாவு போதுமான உப்பும் சேர்த்து
பிரியமாக் கரண்டிதனில் நெய்விட்டுப்
போடப்பா உளுந்துடன் மிளகாய் கிள்ளி
திரமாக வறுத்துக் காயில் பெய்து இறக்கி
தாட்டியமாய்ப் பத்தியத்திற்(கு) உண்ணலாமே!.
Comments
Post a Comment
Your feedback