Skip to main content

மூன்று எறும்புகள்

வெயிலில் படுத்திருக்கும் ஒரு மனிதனின் மூக்கு நுனியில் 3 எறும்புகள் சந்தித்தன.

அதனதன் மரபுக்கேற்ப அந்த எறும்புகள் ஒன்றுக்கொன்று வணக்கம் தெரிவித்துக் கொண்டன.

அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தன.

முதல் எறும்பு சொன்னது.

இந்த மலைகளும் சமவெளிகளும் எனக்குத் தெரிந்தவரை மிகமிக தரிசாக இருக்கின்றன. நாள் முழுவதும் தேடியும் எந்த வகையான தானியமும் கிடைக்கவில்லை.

இரண்டாவது எறும்பு சொன்னது. 

நானும் எல்லா மூலை முடுக்குகளிலும் பார்த்துவிட்டேன். எனக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. என் சொந்தக்கார எறும்புகள் சொல்வது போல எதுவும் வளராத மென்மையான நகர்கின்ற நிலம் இது என்று நான் நம்புகிறேன்.

பிறகு மூன்றாவது எறும்பு தன் தலையை தூக்கிச் சொன்னது.

நண்பர்களே மிகப்பெரும் தலைவனான எறும்பின் மூக்கின் மேல் நாம் நின்று கொண்டிருக்கிறோம். மிக வலுவான  எலும்பு  நாம் காணமுடியாத ஒன்று. அதன் நிழல் நாம் தேட முடியாத ஒன்று. அதன் குரல் உரத்து இருப்பினும் நாம் கேட்க முடியாத ஒன்று.அவன் எங்கும் இருப்பவன்.

இவ்வாறாக அந்த மூன்றாம் எறும்பு பேசியதும் மற்ற இரு எறும்புகளும் ஒன்றையொன்று பார்த்துச் சிரித்துக் கொண்டன.

அந்த நேரத்தில் மனிதன் நகர்ந்து புரண்டு படுத்தபடி தூக்கத்தில் தன் கைகளைத் தூக்கி மூக்கைச் சொறிந்து கொள்ள மூன்று எறும்புகளும் நசுங்கிப் போயின.


The Three Ants

BY KAHLIL GIBRAN


Three ants met on the nose of a man who was asleep in the sun.  

And after they had saluted one another, each according to the custom

of his tribe, they stood there conversing.


The first ant said, “These hills and plains are the most barren I

have known. I have searched all day for a grain of some sort, and

there is none to be found.”


Said the second ant, “I too have found nothing, though I have

visited every nook and glade. This is, I believe, what my people

call the soft, moving land where nothing grows.”


Then the third ant raised his head and said, “My friends, we are

standing now on the nose of the Supreme AnPt, the mighty and infinite

Ant, whose body is so great that we cannot see it, whose shadow

is so vast that we cannot trace it, whose voice is so loud that we

cannot hear it; and He is omnipresent.”


When the third ant spoke thus the other ants looked at each other

and laughed.


At that moment the man moved and in his sleep raised his hand and

scratched his nose, and the three ants were crushed.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...