பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது ...
பெண்ணின் தந்தை படித்த மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்புவான்.
பெண்ணின் தாய் மாப்பிள்ளைக்கு நிறைய சொத்தும் காசு பணமும் இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.
இவர்களுக்கு இடையில் பெண்ணின் சொந்தக்காரர்களோ மாப்பிள்ளை தம்முடைய குலத்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.
ஆனால், மணப் பெண்ணோ தன் கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.
பெண் ணுதவும் காலைப் பிதா விரும்பும் வித்தையே
எண்ணில் தனம்விரும்பும் ஈன்ற தாய் - நண்ணிடையில்
கூரியநல் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான் விரும்பும் பெண்
(நீதி வெண்பா)
Comments
Post a Comment
Your feedback