Skip to main content

Posts

Showing posts from May, 2022

11 PHYSICS Public Exam May 2022

 11 PHYSICS Public Exam May 2022 31.05.22

கோபம் ஒரு கலை...

  கோபம், நாம் எப்படிப் பட்டவர் என்பதை மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடுமாம்.  கோபம் எல்லோருக்கும் பொதுவானது.  ஆனால்,  ஒரு சூழ்நிலையில் கோபப்பட்ட பின்பு அதை மறக்காமல் மனதுக்குள் வைத்துக்கொண்டே இருந்தால் நாம் "கேவலமான பிறவி" என்ற catagory க்குள் வந்து விடுவோமாம். தன்மையானவர்கள் கோபம் எப்படி இருக்கும்? அது சுடுநீர் போல இருக்குமாம். கொதிக்கிற நிலையில் கொண்டுவந்து வைத்தாலும் கொஞ்ச நேரத்தில் ஆறி தன் பழைய குளுமையான நிலைக்கு வந்து விடுவது நீரின் இயல்பு. கோபப்பட்டால் தண்ணீர் மாதிரி கோபப்பட வேண்டும்.  அது அழகு.  எப்படிக் கோபப்பட வேண்டும் என்று தெரியாமல் வெட்டிக் கர்வமும், வெறும் கூச்சலும் என்று வாழ்ந்து கொண்டு, அதையும் "தன் கோபத்துக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள்' என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நமக்கு கோபம் ஒரு கலை என்பது புரியாமலேயே போய்விடுகிறது. நெடுங்காலம் ஓடினும், நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம்.  (நாலடியார்)     

ஜெயிக்காட்டியும் சண்டை போடுவேன்

பெரிய மழை பெய்த பிறகு ஆர்ந்தெழுந்து பாயும் பெருவெள்ளம்.   அதில் குதித்தால் ஆளை இழுத்துக் கொண்டு போய்விடும் என்பது தெரியும்.  இருந்தாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் அந்த வெள்ளத்துக்குள் குதித்து விளையாடுபவர்கள் இருக்கிறார்கள்.   அவன் கூட சண்டை போட்டால் என்னால் கொஞ்ச நேரம் கூட  அவனோடு பேசாமல் இருக்க முடியாது என்று என்க்குத்தெரியும்.  ஆனாலும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் எப்போதும் அவனோடு சண்டை போட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.  (திருக்குறள்)

மரம் போல வாழ்க்கை...

ஒரு பெரிய கட்டடம்  இடிந்த போதும் அதில் இருந்த மரங்கள் இன்னொரு  கூடம் கட்டுவதற்குப் பயன்படும்.  பெரிய மனிதர்கள் அந்த மரம் போன்றவர்கள். தான் எந்த நிலையில் இருந்தாலும் தன்னால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று தான் சிந்திப்பார்கள். பெருமையோடு இருந்த காலத்தில் மட்டுமல்ல. பெருமை எல்லாம் போன  காலத்திலும் பெரியவர்களின் அப்போதைய  பெருமைக்குக் கூட யாரும் ஈடாக முடியாது.  மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு.    (பழமொழி)

எங்கே போச்சோ அந்த eyebrow pencil!

அந்த dressing table லில் தான் கிடக்கும் அந்த eyebrow பென்சிலும் brush உம் (அஞ்சனக் குச்சி?) எப்போதும்.   ஆனால் நான் கண்ணுக்கு மை தீட்டப் போகும் போது மட்டும் என்ன தேடினாலும் என் கைக்கு அது கிடைக்காது. அவன் வீட்டை விட்டு வெளியே போன போது அவன் செய்த தவறுகள் என் கண் முன்னால் வந்து விழுகின்றன. வெளியே போய்விட்டு அவன் வந்து என் கண்ணில் பட்டவுடன் அவனது எல்லாத் தவறுகளும் எங்கோ காணாமல் போய்விடுகின்றன. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. (திருக்குறள்)

எனக்கும் பங்கு வருமா?

 உணவுக்காக உயிருள்ள உடம்பைக் கொன்றவன்  பிறர் கொன்று தர உடம்பட்டவன்  கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று தந்த புலாலை வாங்கிக்கொண்டவன்  மகிழ்வுடன் கொழிக்கும் உயிரைக் கொன்று அதனைச் சமைத்துத் தந்தவன்  சமைத்ததை வாங்கி உண்டவன் இவர்கள் அனைவரையும் பாவம் கட்டுப்படுத்தும். கொன்றான் கொலையை யுடன்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற்-கொன்றதனை அட்ட னிடவுண்டா னைவரினு மாகுமவனக் கட்டெறிந்த பாவங் கருது.     (சிறுபஞ்சமூலம்)

10 TAMIL Public Exam Question Paper May 2022

  10 TAMIL Public Exam Question Paper (06.05.2022) நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள்    : 100   பகுதி – I ( மதிப்பெண்கள் : 15) குறிப்புகள் :   (i)    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்               15x 1 = 15 (ii)   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத்          தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும் .                                                             1. வேர்க்கடலை , மிளகாய் விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை அ ) குலைவகை       ...