Skip to main content

நினைவுகளோடு தழுவட்டும். Kahlil Gibran...On Time

எங்களுக்குக் காலத்தைப் பற்றிச் சொல்” என்று ஒரு சோதிடன் கேட்டான்.

அவன் பதிலளித்தான்.

நீங்களெல்லாம் அளவில்லாததும் அளக்க முடியாததுமான காலத்தைக் கணிக்க முயற்சிக்கிறீர்கள்.

நேரங்களுக்கும் பருவங்களுக்கும் ஏற்றவாறு உங்கள் நடவடிக்கைகளையும் உங்கள் உந்துதலின் போக்கையும் சரிப்படுத்திக் கொள்ளலாம்.

கால ஓடையின் கரையில் அமர்ந்து கொண்டு அதனுடைய ஓட்டத்தை நீங்கள் வேடிக்கை பார்க்கலாம்.

ஆனாலும்… 

காலவரம்புக்குள் இல்லாத வாழ்க்கைக்குக் கரைகள் கிடையாது என்று உங்கள் ஆன்மாவுக்குத் தெரியும்.

நேற்று என்பது இன்றைய நினைவு என்பதும் நாளை என்பது இன்றைய கனவு என்பதும் அதற்குத் தெரியும்.

விண்மீன்கள் வானில் இறைக்கப்பட்ட நாளிலிருந்து அந்த நினைவு  இன்னிசையாகவும்  அந்தக் கனவு சிந்தனையாகவும் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறது என்பதும்  அதற்குத் தெரியும்.

எல்லைகளில்லாத அன்பின் வீரியத்தை உணரத்தெரியாமல் உங்களில் யாரேனும் இருக்கமுடியுமா?

அன்புக்கு எல்லைகளில்லாத போதும் அன்பின் மையப்புள்ளி அவனுக்குள்ளே தான் இருக்கிறது அவன் அன்பின் வீரியத்தை உணரத்தெரியாதவனாக இருந்தாலும் கூட.

அது சிந்தனைகளுக்குள்ளோ செயல்களுக்குள்ளோ இடம் பெயர்வதில்லை.

அப்படியே நீங்கள் காலத்தை உங்கள் பருவத்தைக் கொண்டு கணக்கிட முயன்றால் காலவட்டங்கள் ஒன்றையொன்று உள்ளடக்கியிருக்கட்டும்.

இன்று நேற்றை நினைவுகளோடு தழுவட்டும்.

இன்று  நாளையை ஏக்கங்களோடு தழுவட்டும்.

 

And an astronomer said, "Master, what of Time?"

And he answered:

You would measure time the measureless and the immeasurable.

You would adjust your conduct and even direct the course of your spirit according to hours and seasons.

Of time you would make a stream upon whose bank you would sit and watch its flowing.

Yet the timeless in you is aware of life's timelessness,

And knows that yesterday is but today's memory and tomorrow is today's dream.

And that that which sings and contemplates in you is still dwelling within the bounds of that first moment which scattered the stars into space.

Who among you does not feel that his power to love is boundless?

And yet who does not feel that very love, though boundless, encompassed within the centre of his being, and moving not from love thought to love thought, nor from love deeds to other love deeds?

And is not time even as love is, undivided and paceless?

But if in you thought you must measure time into seasons, let each season encircle all the other seasons,

And let today embrace the past with remembrance and the future with longing.

(Kahlil Gibran   in  The Prophet)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...