வினையெச்சம்
முற்றுப்பெறாத எச்ச வினைகள் வினையைக் கொண்டு முடிந்தால்
அவை வினையெச்சம் எனப்படும்.
இது மூன்று காலத்தையும் காட்டும்.
இ, உ, ய் என்ற எழுத்துக்களில் ஒன்றினை இறுதியில் பெற்று வரும்.
எ.கா
படித்து வந்தான், சென்று கேட்டான், நன்றாய்ப் பார்த்தான், பார்த்துப் பேசினான்.
செய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
அ எனும் எழுத்து இறுதி எழுத்தாகக் கொண்டு அமையும்.
எ.கா
காண வந்தான், கேட்க சொன்னான், கற்கச் சொன்னான், பார்க்கப் போனான்
குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பின் அடிப்படையில் பொருளை உணர்த்தி
நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் ஆகும்.
எ.கா
மெல்லப் பேசினான், கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
தெரிநிலை வினையெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்ச வினை
தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
எ.கா
படிக்கச் செல்கிறான், படித்துத் தேறினான்
Comments
Post a Comment
Your feedback