அவள் கூந்தலில் தேன் உள்ள மலர்களைச் சூடி இருந்தாள். தேனைத் தேடி ஒரு வண்டு வந்து கூந்தலில் உள்ள அம்மலரில் அமர்ந்தது.
தான் அமர்ந்தவுடன் பாரம் தாங்காமல் அவள் சிற்றிடை ஒடிந்து விடுமோ என்று நினைத்தது.
எனவே தான் அமர்ந்திருந்த பூவிலிருந்து எழுந்து மேலே பறந்தது.
ஆனால் பக்கத்தில் வேறு மலர்கள் இல்லாததால் வண்டுக்கு அமர எங்கும் இடம் கிடைக்கவில்லை. எனவே அந்த வண்டு அவள் தலையில் உள்ள மலரிலேயே மீண்டும் அமர்ந்தது.
இப்படி அந்த வண்டு எழுவதும் மீண்டும் அமர்வதுமாக இருக்க, பாவம் அந்தப் பெண் என்னதான் செய்வாள்?
இடையி னிலையரி திறுமிறு மெனவெழா
எமது புகலிட மினியிலை யெனவிழா
அடைய மதுகர மெழுவது விழுவதாம்
அளக வனிதைய ரணிகடை திறமினோ.
(கலிங்கத்துப்பரணி)
சீர் பிரித்த பின்
இடையின் நிலை அரிது ! இறும் இறும் என எழா
எமது புகலிடம் இனி இலை என விழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
அளக வனிதையர் அணிகடை திறமினோ!
பொருள்:
இடை- இடுப்பு
இறும் - முறியும்
எழா- எழுந்து
மதுகரம்- வண்டு
அளகம்- கூந்தல்
வனிதை- பெண்
Comments
Post a Comment
Your feedback